Y-Prime, LLC
தனியுரிமைக் கொள்கை
நோக்கம்
தனிநபர் தரவுகள் சேகரிப்பு மற்றும் பயன்பாடு என்று வருகையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் Y-Prime, LLC (YPrime) உறுதிப்பாட்டோடு இருக்கிறது.
தனியுரிமை, தரவுத் தகவல்கள் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவுகள் தொடர்பான தனிநபர் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் குறித்த YPrime -இன் உறுதிப்பாட்டை இந்த அறிவிப்பு நிலைநாட்டுகிறது.
வாடிக்கையாளர்கள், மருத்துவ ஆய்வுப் பங்கேற்பாளர்கள், விற்பனையாளர்கள், வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், முன்னாள் பணியாளர்கள் மற்றும் YPrime -இன் இணையதளத்தின் (குக்கீகள் மற்றும் இணைய குறிச்சொற்கள் போன்றவை) வருகையாளர்கள் ஆகியோர் குறித்து YPrime -க்கு வழங்கப்பட்ட அல்லது Yprime ஆல் சேகரிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் அனைத்து தனிப்பட்ட தரவுகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
உங்கள் கலிஃபோர்னியா தனியுரிமை உரிமைகள் (California Privacy Rights)
தனிப்பட்ட, குடும்ப அல்லது வீட்டு உபயோகத்திற்கான தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பெறுவது தொடர்பாகத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய சில தகவல்களை வழங்கிய California குடியிருப்பாளர்கள் இதர வணிக நிறுவனங்கள் அவர்களின் நேரடி சந்தைப்படுத்தலுக்குப் பயன்படுத்துவதற்காக நாங்கள் பகிர்ந்து கொண்ட வாடிக்கையாளர் பற்றிய (ஏதேனும் இருந்தால்) தகவல்களை எங்களிடமிருந்து (வருடத்திற்கு ஒரு முறை) கோருவதற்கும் பெறுவதற்கும் California’s “Shine the Light” law -இன் கீழ் உரிமையுடையவர்கள் ஆவார்கள். பொருந்துமானால், நாங்கள் பகிர்ந்து கொண்ட வாடிக்கையாளர் தகவல்களில், இதற்கு உடனடி முந்தைய ஆண்டிற்கான (எ.கா., 2021 -இல் கோரப்பட்டவற்றுக்கு 2020 -இன் பகிர்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், அளிக்கப்படும்) வாடிக்கையாளர் தகவல் வகைகள் மற்றும் வணிகங்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் போன்ற இந்தத் தகவல்கள் அதில் உள்ளடங்கியிருக்கும்.
இந்தத் தகவலைப் பெற, privacy@yprime.com என்ற முகவரிக்கு பொருள் தலைப்பிலும் உங்கள் மின்னஞ்சல் தகவலிலும் \”California Privacy Information -க்கான கோரிக்கை\” என்று குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பவும். அதற்கு பதிலளிக்கும் வகையில், நீங்கள் கோரிய தகவல்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு நாங்கள் அனுப்பி வைப்போம்.
அனைத்து பரிமாறப்படும் தகவல்களும் “Shine the Light” தேவைகளுக்கு உட்பட்டதல்ல என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்,எங்கள் பதிலில் பரிமாற்றப்படும் தகவல்களின் கீழ் வருபவை மட்டுமே வழங்கப்படும்.
YPrime தனிநபர் தனியுரிமையை மதிக்கிறது மற்றும் அதன் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், மருத்துவ ஆய்வுப் பங்கேற்பாளர்கள்,நுகர்வோர், வணிக கூட்டாளிகள் மற்றும் இதர நபர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறது. YPrime தனிநபர் தரவுகளைச் சேகரிப்பதில், பயன்படுத்துவதில் மற்றும் வெளிப்படுத்துவதில் அது வணிகம் செய்யும் நாடுகளின் சட்டங்களுக்கு இணங்கி நடக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது, ஆனால் அதோடு சேர்த்து வணிக நடைமுறைகளில் மிக மேம்பட்ட நெறிமுறைத் தரநிலைகளை நிலைநாட்டும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பைப் பற்றிய கேள்விகள் அல்லது கூடுதல் தகவலுக்கான கோரிக்கைகள் privacy@yprime.com என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். GDPR -க்கு இணக்கமாக YPrime உள்ளது.
எப்போதாவது இந்த அறிவிப்பு புதுப்பிக்கப்படலாம். இதன் பொருள் விளக்கங்கள் புதுப்பிக்கப்பட்டால், அந்தப் பக்கத்தின் இறுதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
பொருள் வரையறைகள்
“தரவுக் கட்டுப்பாட்டாளர்” (Data Controller) என்பது ஒரு வழக்கமான அல்லது சட்டப்பூர்வமான நபர், பொதுத்துறை அதிகாரி, முகமை அல்லது இதர அமைப்பு போன்ற தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் இணைந்தோ தனிநபர் தரவு செயல்படுத்துதல்களின் நோக்கங்கள் மற்றும் வழிமுறைகளை நிர்ணயிக்கும் ஒன்றாகும்.
“தரவுக்குரிய நபர்” (Data Subject) என்பது அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய வாழும் ஒரு நபரைக் குறிக்கிறது.
“GDPR” என்பது “ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பு” (European Union’s General Data Protection Regulation) என்பதாகும்.
“தனிநபர் தரவு” (Personal Data) என்பது வாழும் ஒரு தனிநபர் தொடர்பான தகவலின் அடிப்படையில் அந்த நபரை அடையாளப்படுத்தக் கூடிய எந்த ஒரு தகவலையும் கொண்டிருக்கும். GDPR -இன் கீழ் இந்த தரவுகள் “தனிப்பட்டு அடையாளம் காணக்கூடிய தகவல்கள்” (Personally Identifiable Information) என்று அறியப்படுகிறது.
“செயலாக்குதல்” (Processing) என்பது சேகரித்தல், சேமித்தல், திருத்துதல், வெளிப்படுத்துதல் அல்லது நீக்குதல் போன்றவை உட்பட அந்த தரவின் எந்த ஒரு பயன்பாட்டையும் குறிக்கும்.
“தரவு செயலாக்குநர்” (Data Processor) என்பது “தரவுக் கட்டுப்பாட்டாளர்” (Data Controller) சார்பாக ஒரு தனிநபர் தரவுகளைச் செயலாக்கும் ஒரு வழக்கமான அல்லது சட்டப்பூர்வமான நபர், பொதுத்துறை அதிகாரி, முகமை அல்லது இதர அமைப்பைக் குறிக்கும்.
\”தனிநபர் தரவுகளின் சிறப்பு வகைகள்\” (“Special Categories of Personal Data”) என்பது ஒரு நபரின் தகவல் ஆகும், அவரது இனம் அல்லது இனவழித் தோற்றம், குற்றவியல் பதிவேட்டுத் தரவு, அரசியல் கருத்துக்கள், மதம் அல்லது தத்துவம் சார்ந்த நம்பிக்கைகள்,தொழிற்சங்க உறுப்பினர் நிலை, ஆரோக்கியம், பாலியல் வாழ்க்கை அல்லது பாலியல் நாட்டம் மற்றும் பயோமெட்ரிக் தரவு ஆகியவை பற்றிய ஒரு வகையான தனிநபர் தரவுகள் ஆகும்.
“குற்றவியல் பதிவேட்டுத் தரவு“ (Criminal Records Data) என்பது ஒரு தனிநபரின் குற்றவியல் தண்டனைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவர் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் ஆகும்.
தரவு பாதுகாப்புக் கொள்கைகள் (Data Protection Principles)
YPrime பின்வரும் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு இணங்க தனிநபர் தரவுகளைச் செயலாக்குகிறது:
- தனிநபர் தரவுகளை நியாயமாகவும், சட்டப்பூர்வமாகவும் மற்றும் வெளிப்படையான வகையிலும் செயலாக்குகிறது.
- குறிப்பிட்ட, வெளிப்படையான மற்றும் சட்டப்பூர்வமான நோக்கங்களுக்கு மட்டுமே தனிநபர் தரவுகளை சேகரிக்கிறது.
- செயலாக்குதல் நோக்கங்களுக்குத் எவ்வளவு தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு போதுமான, பொருத்தமான மற்றும் வரம்புக்குள் மட்டுமே தனிநபர் தரவுகளைச் செயலாக்கும்.
- துல்லியமான தனிநபர் தரவுகளை மட்டுமே வைத்திருக்கும். மேலும் தவறான தனிநபர் தரவுகளை திருத்தியமைக்க அல்லது எந்த ஒரு தாமதமுமின்றி நீக்கிவிட தேவையான நியாயமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
- செயலாக்கத் தேவைப்படும் காலத்திற்கு மட்டுமே தனிநபர் தரவுகளை வைத்திருக்கும்.
- தனிநபர் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதையும், அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டத்துக்குப் புறம்பான செயலாக்கத்திற்கு எதிராகவும், விபத்து காரணமான இழப்பு, அழிப்பு அல்லது சேதமடைவது ஆகியவற்றுக்கு எதிராகப் பாதுகாக்கப்படுவதையும்உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
Yprime தனிநபர் தரவுகளை எவ்வாறு சேகரிக்கிறது, செயலாக்குகிறது மற்றும் அப்புறப்படுத்துகிறது என்பதற்கும், மேலே குறிப்பிட்ட கொள்கைகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறது
- தனிநபர் தரவுகளை, நியாயமாகவும், சட்டப்பூர்வமாகவும் மற்றும் வெளிப்படையான முறைகளிலும் செயலாக்குகிறது
- குறிப்பிட்ட வெளிப்படையான மற்றும் சட்டப்பூர்வமான நோக்கங்களுக்கு மட்டுமே தனிநபர் தரவுகளை சேகரிக்கிறது.
- செயலாக்குதல் நோக்கங்களுக்குத் எவ்வளவு தேவைப்படுகிறதோ அந்த அளவுக்கு போதுமான, பொருத்தமான மற்றும் வரம்புக்குள் மட்டுமே தனிநபர் தரவுகளைச் செயலாக்கும்.
- துல்லியமான தனிநபர் தரவுகளை மட்டுமே வைத்திருக்கும். மேலும் தவறான தனிநபர் தரவுகளை திருத்தியமைக்க அல்லது எந்த ஒரு தாமதமுமின்றி நீக்கிவிட தேவையான நியாயமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
- செயலாக்கத் தேவைப்படும் காலத்திற்கு மட்டுமே தனிநபர் தரவுகளை வைத்திருக்கும்.
- தனிநபர் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதையும், மற்றும் அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டத்துக்குப் புறம்பான செயலாக்கத்திற்கு எதிராகவும், விபத்து காரணமான இழப்பு, அழிப்பு அல்லது சேதமடைவது ஆகியவற்றுக்கு எதிராகப் பாதுகாக்கப்படுவதையும்உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
- தனிநபர் தரவுகளை எவ்வாறு சேகரிக்கிறது, செயலாக்குகிறது மற்றும் அப்புறப்படுத்துகிறது என்பதற்கும், மேலே குறிப்பிட்ட கொள்கைகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறது.
தேவையென்று கருதும்போது, Data Controller, YPrime அதன் தனியுரிமை அறிவிப்புகளில் தனிநபர் தரவை செயலாக்குவதன் காரணத்தையும், அம்மாதிரியான தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதையும் மற்றும் செயலாக்குவதற்கான சட்டப்பூர்வ அடிப்படை காரணங்களையும் தெரிவிக்கிறது, வேறு எந்த பிற காரணங்களுக்காகவும் தனிநபர்களின் தனிநபர் தரவைச் செயலாக்காது.Yprime எங்கே தரவுகளைச் செயலாக்குவதற்கு அடிப்படையாகத் தனது சட்டப்படியான விருப்பங்களைச்சார்ந்திருக்கிறதோ, அத்தகைய சந்தர்ப்பங்களில் அதன் விருப்பங்கள் தனிநபரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு மதிப்பாய்வை மேற்கொள்ளும். தனிநபர் ஒருவர் தனது தகவல்கள் மாறி இருக்கிறது அல்லது தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தால் Yprime தனிநபர் தரவுகளை முறையாக புதுப்பிக்கும்.
தேவையென்று கருதும் போது Data Processor அல்லது sub-processor, YPrime தனிநபர் தரவுகளை பொருத்தமான சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் குறிப்பாக Data Controller -இன் வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாக மட்டுமே செயலாக்கும்.
பணியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் என்ற உறவின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தனிநபர் தரவுகள் தனிநபரின் தனிப்பட்ட பணியாளர் கோப்பில் தாள் வடிவில் அல்லது மின்னணுவியல் வடிவில் மற்றும் Yprime HR அமைப்பில் வைக்கப்பட்டிருக்கும். அம்மாதிரியான HR சம்பந்தப்பட்ட தனிநபர் தரவுகளை Yprime வைத்திருக்கும் கால அளவு தனிநபர்களுக்கு வழங்கப்படும் தனியுரிமை அறிக்கைகளில் இடம் பெற்றிருக்கும்.
Yprime -இன் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் Yprime -க்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் சந்தர்ப்பங்களில் சில சமயங்களில் வரையறையுடன் கூடிய அளவில் தனிநபர் தரவுகளை அணுக முடியும். இந்த ஒப்பந்ததாரர்களின் தனிநபர் தரவுக்கானஅணுகல்கள் Yprime -க்கு குறைந்த அளவிலான அவர்களது பணியை மேற்கொள்ள அவர்களுக்கு நியாயமாக தேவைப்படும் வரையறைக்கு உட்பட்டு இருக்கும். Yprime தனது செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் பின்வருபவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. (1) இந்த அறிவிப்புக்கு இணங்க எந்தவொரு தனிநபர் தரவுகளின் தனியுரிமையைப் பாதுகாக்க வேண்டும், மற்றும் (2) தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சட்டத்துக்கு உட்பட்டு YPrime -க்கு வழங்கும் நோக்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு நோக்கத்திற்காகவும் தனிநபர் தரவுகளைப் பயன்படுத்தவோ அல்லது வெளியிடவோ கூடாது.
GDPR -இன் தேவைகளுக்கு இணங்க Yprime தனது தனிநபர் தரவு செயலாக்க நடவடிக்கைகளின் ஒரு பதிவேட்டை வைத்திருக்கிறது.
தனிநபர் உரிமைகள்
தரவுக்குரிய ஒரு நபராக, தனிநபர்களுக்கு அவர்களது தனிநபர் தரவு சம்பந்தமான பல்வேறு உரிமைகள் உள்ளன.
தரவுக்குரிய நபரின் அணுகல் கோரிக்கைகள்
தங்களின் தனிநபர் தரவுகள் என்ன வகையில் YPrime கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு செயலாக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் மற்றும் அம்மாதிரியான தனிநபர் தரவுகள் Yprime அவற்றைச் சேகரித்த நோக்கத்திற்குச் சரியானதாகவும் மற்றும் பொருத்தமானதாகவும் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளும் உரிமை தனிநபர்களுக்கு உண்டு.
ஒரு தனிநபர் ஒரு நியாயமான கோரிக்கையை அளித்தால் Yprime அவருக்குப் பின்வரும் தகவல்களைத் தெரிவிக்கும்:
- அவரது தரவுகள் செயலாக்கப்படுகிறதா இல்லையா என்ற தகவல் மற்றும் அப்படியென்றால் அது ஏன் என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட தனிநபர் தரவுகளின் வகைகள் மற்றும் அவை தனிநபரிடமிருந்து பெறப்பட்டிருக்காவிட்டால் தரவுகளின் மூலாதாரம் பற்றிய தகவல்கள் அளிக்கப்படும்.
- அவரது தரவுகள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியிலுள்ள பெறுநர்கள் உட்பட எவருக்கு வழங்கப்படுகிறதுஅல்லது வழங்கப்படலாம் மற்றும் அம்மாதிரியான பரிமாற்றங்களுக்குப் பொருந்தக்கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் ;
- அவரது தனிநபர் தரவுகள் எவ்வளவு காலத்திற்குச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் (அல்லது அந்தக் காலம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது);
- தரவுகளை திருத்தியமைக்க அல்லது நீக்கிவிட அல்லது செயலாக்க நடைமுறைகளை கட்டுப்படுத்த அல்லது மறுப்புத்தெரிவிக்க அவருக்கு உள்ள உரிமைகள்;
- Yprime அவரது தரவு பாதுகாப்பு உரிமைகளுக்கு இணங்க நடக்கத் தவறிவிட்டதாக அவர் நினைக்கும் பட்சத்தில் பொருத்தமான தரவுகள் தனியுரிமை மேற்பார்வை அதிகார மையத்திடம் புகார் அளிக்க அவருக்கு உள்ள உரிமைகள்; மற்றும்
- YPrime தானியங்கி முடிவெடுக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுகிறதா இல்லையா மற்றும் அத்தகைய எந்த ஒரு முடிவெடுப்பதிலும் உள்ள அறிவுப்பூர்வமான செயல்பாடு என்ன.
செயலாக்க சமயத்தில் சேகரிக்கப்பட்ட தனிநபர் தரவுகளின் ஒரு நகலை தனிநபருக்கு Yprime அளிக்கும். அதற்கான கோரிக்கையை தனிநபர் வேறு ஏதாவது வடிவில் கோரியிருந்தாலே தவிர, மின்னியல் மூலமாக அளிக்கப்படும் கோரிக்கைகளுக்கு, இது பொதுவாக மின்னியல் வடிவில்தான் இருக்கும்.
தனிநபர் கூடுதல் பிரதிகளைக் கோரினால், Yprime ஒரு நியாயமான கட்டணத்தை விதிக்கலாம், அது அம்மாதிரியான பிரதிகளை வழங்கத்தேவையான நிர்வாக செலவுகளின் அடிப்படையில் அமையும்.
தரவுக்குரியவர் அணுகல் கோரிக்கையை மேற்கொள்ள, தனிநபர் ஒரு மின்னஞ்சல் செய்தியை marketing@yprime.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அந்த வேண்டுகோளை செயல்படுத்தும் முன்பாக பெரும்பாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அடையாள சான்றை கேட்க Yprime சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளது. மேலும் சில சந்தர்ப்பங்களில்,Yprime தானே தரவு செயலாக்குநராக அல்லது துணை செயலாக்குநராக (Data Processor அல்லது sub-processor) இருக்கும் பட்சத்தில் Yprime தரவு கட்டுப்பாட்டாளரை (data controller) தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.
சாதாரணமாக வேண்டுகோள் பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் Yprime பதிலளித்துவிடும். பெருமளவிலான தனிநபர் தரவுகளை YPrime செயலாக்கம் செய்ய வேண்டியிருக்கும் ஒரு சில சந்தர்ப்பங்களில், வேண்டுகோள் பெறப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் பதிலளித்துவிடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அசல் வேண்டுகோள் பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் அது குறித்து அவருக்கு எழுத்து மூலம் Yprime தெரிவித்துவிடும்.
தரவுகளை அணுகுவதற்கான வேண்டுகோள் வெளிப்படையாக எந்த ஒரு அடிப்படையும் இல்லாததாக அல்லது வரையறைக்கு மீறிய செயலாக இருந்தால் அந்த வேண்டுகோளுக்கு இணங்க வேண்டிய கடமை Yprime -க்குக் கிடையாது. அதற்கு மாறாக, அதற்கு பதிலளிக்க Yprime ஒப்புக்கொள்ளலாம் ஆனால் அந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்க தேவையான நிர்வாக செலவுகளின் அடிப்படையில் ஒரு கட்டணத்தை விதிக்கும். Yprime ஏற்கனவே பதிலளித்த ஒரு நடவடிக்கை குறித்து மீண்டும் வேண்டுகோள் விடுப்பது தரவுகளை அணுகுவதற்கான வேண்டுகோள் வெளிப்படையாக எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் அல்லது வரையறைக்கு மீறிய செயலாக கருதப்படுவதற்கு ஒரு உதாரணமாகும். வெளிப்படையாக எந்த ஒரு அடிப்படையும் இல்லாத அல்லது வரையறைக்கு மீறிய வேண்டுகோளை ஒரு தனிநபர் சமர்ப்பித்தால் அது குறித்தும் அதற்கு பதில் அளிக்குமா அல்லது இல்லையா என்பதையும் Yprime தெரிவிக்கும்.
இதர உரிமைகள்
தனிநபர்களுக்கு அவர்களின் தனிநபர் தரவுகள் தொடர்பாக பல்வேறுன இதர உரிமைகள் உள்ளன.
தனிநபர்கள் Yprime இடமிருந்து பின்வருபவற்றைக் கோரலாம்:
- அவர்களது தனிநபர் தரவுகளின் சேகரிப்பு மற்றும் பயன்பாடு குறித்த தகவல்களைப் பற்றி அவர்களுக்கு தெரிவித்தல்;
- தனிநபர் தரவுகளில் உள்ள தவறுகளைத் திருத்த;
- செயலாக்கத்தை நிறுத்த அல்லது செயலாக்க நோக்கங்களுக்குத் தேவைப்படாத நிலையில் தனிநபர் தரவுகளை நீக்க;
- அவர்களது தனிநபர் தரவுகளை சேமித்து வைக்க ஆனால் அதைப் பயன்படுத்தாமல் இருக்க;
- நேரடி சந்தைப்படுத்துதல் போன்ற சில சந்தர்ப்பங்களில் அவர்களது தனிநபர் தரவுகள் செயலாக்கப்படுவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் தனிநபர் உரிமையை மதித்து நடக்க;
- அவர்களது தனிநபர் தரவுகளை எடுத்துச்செல்லக்கூடிய வடிவத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டும் அப்போதுதான் வேறொரு IT சூழலில் அதை எளிதாக அவர்களால் மாற்றிக்கொள்ள முடியும்.
பொதுவாகத் தரவுகளை “comma-separated-values” (csv) கோப்பு வடிவங்களில் வழங்கி நாங்கள் இந்த வேண்டுகோளைப் பூர்த்தி செய்வோம்;
- அவர்களது தனிநபர் தரவின் அடிப்படையில் தானியக்க முடிவுகளை எடுப்பது தொடர்பானவற்றில் ஒரு தனிநபரின் உரிமைகளை மதித்து நடத்தல்;
- தனிநபர் தரவுகளை செயலாக்கும் Yprime -இன் சட்டப்பூர்வமான காரணங்களுக்கு (அதில் தனிநபர் தரவுகளை செயலாக்க Yprime அதன் சட்டப்பூர்வமான நலன்களை ஒரு காரணமாக குறிப்பிடும் சந்தர்ப்பங்களில்) மேலதிகமாக தனிநபரின் நலன்கள் இருக்குமானால் தனிநபர் தரவுகள் செயலாக்கத்தை நிறுத்துதல் அல்லது அத்தரவுகளை அழித்தல்;
- அந்த செயலாக்கம் சட்டத்துக்குப் புறம்பாக இருக்கும் பட்சத்தில் செயலாக்கத்தை நிறுத்துவது அல்லது தனிநபர் தரவுகளை அழிப்பது; மற்றும்
- தரவுகள் துல்லியமற்றதாக இருக்கும் பட்சத்தில் அல்லது தனிநபர் தரவுகளைச் செயலாக்கும் Yprime -இன் சட்டப்பூர்வமான காரணங்களுக்கு மேலதிகமாக தனிநபரின் நலன்கள் இருக்கிறதா இல்லையா என்ற ஒரு தாவா எழுந்தால் தனிநபர் தரவுகளின் செயலாக்கத்தைச் சிறிது காலம் நிறுத்தி வைப்பது.
இவற்றில் எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு Yprime -ஐ கேட்டுக்கொள்வதாக இருந்தாலும் தனிநபர் ஒரு மின்னஞ்சல் செய்தியை marketing@yprime.com, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
EU நபர்கள் (EU தரவுக்குரிய நபர்கள்) தங்களது நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் மற்றும் பிற குறைதீர்க்கும் நடைமுறைகளால் தீர்க்க முடியாத சில விட்டுப்போன உரிமை கோரிக்கைகளுக்குத் தீர்வு காண அவர்களை கட்டுப்படுத்தக்கூடிய இசைவு நடுவர் தீர்ப்பாயத்திடம் கோரலாம்.
எங்களோடு நேரடியாக தீர்வு காண முடியாத ஏதாவது ஒரு கருத்து அல்லது பிரச்சனை உங்களுக்கு இருக்குமானால், நீங்களும் ஒரு தகுதியுள்ள உள்ளூர் தரவு பாதுகாப்பு ஆணையத்தை அணுகலாம்.
தரவு பாதுகாப்பு
தனிநபர் தரவு பாதுகாப்பை YPrime வெகு தீவிரமானதாக கருதுகிறது. இழப்பு, விபத்து காரணமாக அழிக்கப்படுதல், தவறான பயன்பாடு அல்லது வெளிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராகத் தனிநபர் தரவுகளை பாதுகாக்க மற்றும் பணியாளர்கள் அவர்களின் கடமையை முறையாக நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தவிர இதர சந்தர்ப்பங்களில் அந்த தரவுகள் அணுகப்படாமல் காக்கத் தேவையான, முறையான உள்ளக கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை Yprime கொண்டுள்ளது.
தன் சார்பாக தனிநபர் தரவுகளைச் செயலாக்க ஒரு மூன்றாம் நபரை Yprime நியமிக்கும் சந்தர்ப்பத்தில், அந்த மாதிரியான தரப்பினர்கள் அம்மாதிரி செயல்பாடுகளை எழுத்து மூலமான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் இரகசியப் பாதுகாப்பை உறுதிசெய்ய கடமைப் பட்டிருப்பார்கள், மேலும் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முறையான தொழில்நுட்ப மற்றும் நிறுவனம் சார்ந்த நடைமுறைகளை அமல்படுத்தவும் கடமைப் பட்டிருப்பார்கள்.
தனிநபர் தரவுகள் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்படும் சந்தர்ப்பங்களில் இருக்கக்கூடிய சாத்தியமுள்ள பொறுப்புகளை YPrimeஅங்கீகரிக்கிறது. போதுமான மற்றும் ஒரு சம அளவிலான பாதுகாப்பை வழங்கும் கொள்கைகள் அல்லது இணையான சட்டங்களை மூன்றாம் தரப்பினர் பின்பற்றி செயல்படுவதை முதலாவதாக உறுதி செய்து கொள்ளாமல் Yprime எந்த ஒரு தனிநபர் தரவுகளையும் மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பாது. ஒரு வாடிக்கையாளர் அல்லது வேறொரு தரவு கட்டுப்பாட்டாளர் (data controller) சட்டப்பூர்வமாக அறிவுறுத்தினாலன்றி, சம்பந்தப்படாத எந்த ஒரு மூன்றாம் தரப்பினருக்கும் தனிநபர் தரவுகளை Yprime அனுப்பாது. உதாரணமாக,அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் சட்டம் அல்லது சட்ட நடவடிக்கைகளின் தேவைகளின் அடிப்படையில் ஒரு வாடிக்கையாளரின் தனிநபர் தரவுகள் வெளியிடப்படுவது அல்லது உயிர், ஆரோக்கியம் அல்லது பாதுகாப்பு போன்ற முக்கியமான பலன்களின் தேவைக்காக அடையாளம் காணப்படும் நபருக்காக வெளியிடப்படுவது ஆகியவை உள்ளடங்கும். தனிநபர் தரவுகளை ஒரு சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபருக்கு அனுப்ப Yprime -க்கு வேண்டுகோள் விடப்படும் சந்தர்ப்பங்களில் அம்மாதிரியான மூன்றாம் தரப்பினர் போதுமான மற்றும் ஒரு சம அளவிலான பாதுகாப்பை வழங்குவதை Yprime உறுதி செய்து கொள்ளும். YPrime இடமிருந்து தனிநபர் தரவுகளை பெற்ற ஒரு மூன்றாம் தரப்பு இந்த அறிவிப்புக்கு முரண்படும் வகையில் அந்த தனிநபர் தரவுகளை பயன்படுத்துகிறது அல்லது வெளியிடுகிறது என்பது குறித்து Yprime -க்குத் தெரியவந்தால் அம்மாதிரியான பயன்பாட்டை அல்லது வெளிப்படுத்தலை நிறுத்த தேவையான நியாயமான நடவடிக்கைகளை Yprime மேற்கொள்ளும்.
தாக்கத்தின் மதிப்பீடுகள்
YPrime மேற்கொள்ளும் சில செயலாக்கங்கள் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். செயலாக்கம் தனிநபரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் செயலாக்கத்தின் அவசியம் மற்றும் விகிதாசாரத்தை தீர்மானிக்க தரவு பாதுகாப்பு தாக்கவிளைவு மதிப்பீட்டை YPrime மேற்கொள்ளும். இவற்றில், நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான நோக்கங்கள்,தனிநபர்களுக்கான அபாயங்கள் மற்றும் அந்த அபாயங்களை சரிசெய்ய மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.
தரவு மீறல்கள்
தனிநபர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு தனிநபர் தரவு மீறல் ஏற்பட்டிருப்பதாக YPrime கண்டறிந்தால், அது கண்டறியப்பட்ட 72 மணி நேரத்திற்குள் அது குறித்து தகவல் ஆணையரிடம் YPrime புகாரளிக்கும். அனைத்து தரவு மீறல்களையும் அவற்றின் விளைவு குறித்து பொருட்படுத்தாமல் Yprime பதிவு செய்யும்.
மீறல்கள் தனிநபரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்றால், அம்மாதிரியான ஒரு மீறல் ஏற்பட்டு இருக்கிறது என்பதை பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு தெரிவிக்கும் மேலும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய தகவல்களையும் மற்றும் அதைத் தணிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும்.
பன்னாட்டு தரவு பரிமாற்றங்கள் (International Data Transfers)
YPrime மூலமாக கட்டுப்படுத்தப்படும் அல்லது செயலாக்கப்படும் தனிநபர் தரவுகள் EEA -க்கு வெளியே உள்ள நாடுகளுக்கும் பரிமாற்றம் செய்யப்படலாம்.
இந்த அறிவிப்பை மீறும் வகையில் தனிநபர்களின் தரவைப் பயன்படுத்துவது மற்றும் வெளிப்படுத்துவது தொடர்பான எந்தவொரு புகாரையும் அல்லது சர்ச்சையையும் முழுமையாக விசாரித்து தீர்க்க முயற்சிக்கும் பொருட்டு பொருத்தமான, நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த விதிப் பிரிவுகளை பயன்படுத்தி இந்த அறிவிப்புக்கு இணங்க செயல்படுவதற்கு Yprime உத்தரவாதம் அளிக்கிறது.
YPrime பணியாளர்களின் பொறுப்புகள்
YPrime பணியாளர்களுக்கு அவர்களின் பணி காலத்தின் போது இதர தனிநபர்கள் மற்றும் எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் போன்றோரின் தனிநபர் தரவுகளை அணுகும் வாய்ப்பு இருக்கக்கூடும். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில், அதன் அலுவலகர்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் தரவு பாதுகாப்பு கடமைகளைப் பூர்த்தி செய்ய அதற்கு உதவிட Yprime தனிநபர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. .
தனிநபர் தரவுகளை அணுகும் வாய்ப்பைக் கொண்ட பணியாளர்கள் செய்ய வேண்டியவை:
- அணுகலுக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்ட தரவுகளை மட்டுமே அணுக வேண்டும் மற்றும் அது அங்கீகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும்;
- YPrime –க்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ, முறையான அதிகாரம் அளிக்கப்பட்ட தனிநபர்களைத் தவிர வேறு எந்த ஒருவருக்கும் தரவுகளை வெளிப்படுத்தக்கூடாது;
- தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், உதாரணமாக கடவுச்சொல் பாதுகாப்பு மற்றும் கோப்புக்கள் சேமிப்புப் பாதுகாப்பு மற்றும் நீக்கம் உட்பட வளாகம் மற்றும் கணினிக்கான அணுகல் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும்;
- தரவு மற்றும் கருவியை பாதுகாக்க பயன்படுத்தப்படும் மறைக் குறியீடு அல்லது கடவுச்சொல் பாதுகாப்பு போன்ற முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தனிநபர் தரவுகள் அல்லது அவற்றை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் சாதனங்களை அல்லது தனிநபர் தரவுகளை அணுக பயன்படுத்தப்படக் கூடிய எந்த ஒன்றையும் Yprime வளாகத்திலிருந்து அகற்றக்கூடாது;
- பணி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் உள்ளக இயக்ககம் அல்லது தனிநபர் கருவிகளில் தனிநபர் தரவைச் சேமித்து வைக்கக் கூடாது; மற்றும்
- அவர்களுக்கு தெரியவரும் எந்த ஒரு தரவு மீறலையும் உடனடியாக privacy@yprime.com என்ற முகவரியில் புகார் அளிக்க வேண்டும்.
இந்த தேவைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால், அது ஒழுங்குமுறை விதிகளை மீறிய செயலாக கருதப்பட்டு, அதற்கு Yprimeஒழுங்குமுறை கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Yprime அதன் அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களது பணித்துவக்க செயல்முறைகளின் ஒரு பகுதியாகவும் அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்களது தரவு பாதுகாப்புப் பொறுப்புகள் குறித்து பயிற்சி அளிக்கும்.
தனிநபர் தரவுகளை முறையாக தொடர்ந்து அணுக வேண்டிய தேவையுள்ள பணியாளர்கள் அல்லது இந்த அறிவிப்பை அமல்படுத்தும் பொறுப்பு உள்ளவர்கள் அல்லது இந்த அறிவிப்பின் கீழ் தரவுகளுக்கான அணுகல் வேண்டுகோள்களுக்கு பதில் அளிக்கும் நிலையில் இருப்பவர்கள் அனைவருக்கும் அவர்களது கடமைகளை முறையாக புரிந்து கொள்ளவும் அதற்கு இணங்க எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் கூடுதல் பயிற்சி வழங்கப்படும்.
இணையதள தனியுரிமை
YPrime, அல்லது YPrime வழிகாட்டுதல்களின் படி செயல்படும் மூன்றாம் தரப்பினர், அதன் இணையதளம் மற்றும் அதன் இணையத்தின்கூறுகளுடன் வருகையாளர்கள் மேற்கொள்ளும் ஊடாடல்கள் மூலம் இந்த அறிவிப்புக்கு உட்பட்டு தனிநபர் தரவுகளைச் சேகரிக்கலாம். ஒரு நபர் தனது பெயர் மற்றும்/அல்லது முகவரியைச் சமர்ப்பிக்கும்போது அத்தகைய தனிநபர் தரவுகளைச் சேகரிக்கலாம். IP முகவரிகள், குக்கீ குறியீடுகள், பிக்சல்கள் மற்றும் இறுதிப்- பயனர் இணையதள செயல்பாடு போன்ற பல்வேறு தானியங்கி டிஜிட்டல் வழிமுறைகள் மூலமாக கூட ஒரு தனிநபர் முனைப்பாக தகவல்களை சமர்ப்பிக்காமலே Yprime வலைத்தளத்திற்கு தனிநபர் ஒருவர் மேற்கொள்ளும் வருகைகள் குறித்த தகவல்களை YPrime அல்லது YPrime வழிகாட்டுதல்களின் படி செயல்படும் மூன்றாம் தரப்பினரும், சேகரிக்கலாம். இத்தகைய தானியங்கி டிஜிட்டல் வழிமுறைகளால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் குறிப்பிட்ட நபர்களை நேரடியாக அடையாளம் காட்டாது என்றாலும், பயனர் பயன்படுத்தும் கணினி மென்பொருள் தொடர்பான IP முகவரி மற்றும் உலாவியின் பதிப்பு போன்றவை குறித்து இணைய உலாவிகள் தானாகவே YPrime இணையதளத்திற்கு தகவல்களை அனுப்பும். தனிநபரை அடையாளம் காணக்கூடிய கூடுதல் தகவல் இல்லாமல் இந்த தொழில்நுட்பங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை மட்டுமே பயன்படுத்தி, தனிநபர்களை அடையாளம் காண முடியாது.
குக்கீஸ் (Cookies)
YPrime குக்கீகளைப் பயன்படுத்துகிறது, அவை எங்கள் தளத்தால் வழங்கப்பட்டு உங்கள் கருவியில் சேமிக்கப்படும் சிறிய தரவுக் கோப்புகளாகும். பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த மற்றும் இலக்கோடு கூடிய விளம்பர நோக்கங்களுக்காக இணையதளத்தை இயக்க மற்றும் தனிப்பயனாக்கம் செய்வது உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக எங்களால் அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் குக்கீகளை எங்கள் தளம் பயன்படுத்துகிறது. உங்கள் பிரவுசிங் அமர்வு நிறைவடைந்த பிறகு குக்கீகள் காலாவதியாகலாம் அல்லது அடுத்த முறை நீங்கள் இணையதளத்திற்கு வருகை தருகையில் தயாராக இருக்கும் பொருட்டு அவை உங்கள் கணினியில் சேமித்து வைக்கப்படலாம். உங்கள் உலாவியில் உள்ள அமைப்புகளைச் சரிசெய்வதன் மூலம் குக்கீகளை தடுக்கலாம் (இதை எப்படிச் செய்வது என்பதை உங்கள் உலாவியின் \”உதவி\” பகுதியைப் பார்க்கவும்). குக்கீகளை செயலிழக்கச் செய்வது எங்கள் வலைத்தளத்துடனான உங்கள் மேம்பட்ட அனுபவத்தைப் பாதிக்கும்.
பதிப்பு 9, கடைசியாக 25 மார்ச் 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது